எங்க ஊர் பகுதிகளில் இருக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண்கேட்டல், பன்றிவேட்டை பாக்குத் திருவிழாவைத் தொடர்ந்து இன்று பகவதியம்மன் கோயில் பூஜை.
பெரும்பாலும் பகவதியம்மனுக்கு கேரளாவில் தான் கோயில்கள் இருக்கும். ஆச்சர்யமாக பகவதியம்மனுக்கு எங்க ஊரிலும் ஒரு கோயில். கோயில் என்று சொல்லுமிடத்தில் அடர்ந்த மரங்களும், செடி கொடிகளும் தான் சூழ்ந்து இருக்கும் கட்டிடமோ, சிலையோ எதுவுமே கிடையாது.
இந்தக் கோயில் என்றில்லை இன்னும் சிலவும் இருக்கிறது, அங்கேயும் சிலைகளோ, கட்டிடமோ இல்லாது பொட்டல் வெளியாக இருக்கும். ஆனால் அவ்விடத்தைக் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். கோயில்களுக்கான எந்த தடயமும் இல்லாது எப்படி அந்த இடங்கள் கோயில்களானது என்று அடுத்த முறை ஊருக்குப் போகும் போது ஏதாவது பெருசை புடிச்சு விசாரிக்கணும்.
இந்தக் கோயிலுக்கு பூஜை போடுவதைப் பற்றி ஒவ்வொரு வருடமும் ஊர் கூட்டம் கூடி பேசுவார்கள், ஆனாலும் கூட்டம் மட்டுமே வருடம் தோறும் நடக்கும், பூஜை நடக்காது. காரணம் சில கண்டிஷன்கள்.
* பூஜை நடக்கும் மாதத்தில் யாரும் மண்டைய போட்டிருக்கக் கூடாது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும் எங்கே பூஜையன்று கன்ஃபார்ம் ஆகிடும்மோன்னும் பூஜையை ஒத்தி வைத்துவிடுவார்கள்.
*அந்த மாதத்தில் பிரசவம் நடந்திருக்கக் கூடாது. இதிலும் வெயிட்டிங் லிஸ்ட் ரூல்ஸ் பின்பற்றுவார்கள்.
*பொண்ணுங்க புதுசா பச்சை ஓலைக்கு வேலை வைத்து விடக் கூடாது.
இப்படி பட்ட ரூல்ஸ் அந்த காலத்தில் மக்கள் தொகை கம்மியாக இருந்ததால் ஒர்க் அவுட் ஆகியிருக்கும், இப்போதும் ஃபாலோ பண்ணுவதால் பூஜை சாத்தியமில்லாமலேயே இருக்கு.
அப்படியே எல்லாம் கூடி வந்தாலும் அலும்புக்குன்னே ஊருக்கு நாலு பேரு இருப்பாய்ங்கல்ல அதில எவனாவது முப்பாட்டன் காலத்தில நடந்த வாய்க்கால் சண்டையை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்து தீர்க்கச் சொல்லுவாய்ங்க, இல்லாட்டி நீங்க எப்படி பூஜை போடுறீங்கன்னு நானும் பாக்குறேன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்புறம் எங்கிட்டு பூஜை நடத்துறது.
எனக்குத் தெரிந்து என்னுடைய ஐந்தாவது வயதிலும், பதிமூன்றாவது வயதிலும் இரண்டு பூஜைகளை பார்த்திருக்கிறேன்.கடைசியாக பூஜை நடந்தது 91 ம் வருடமென்று நினைவு.
பூஜையன்று கோயில் இருக்குமிடத்தை சுத்தம் செய்து வேட்டியாலேயே பந்தல் போட்டு நான்கு பக்கமும் வேட்டியைக் கொண்டே சுற்று சுவர் போலவும் மறைத்து விடுவார்கள்.பெண்கள் நாட் அலவ்டு (சாதாரண நாட்களிலும் பெண்கள் தூரத்தில் இருந்தே வழிபடுவார்கள்).
ஏகப்பட்ட ஆடுகள், கோழிகள் வேண்டுதலின் பேரில் பலி கொடுக்கப்படும். எங்க ஊருக்கு சம்பந்தமே இல்லாத தூரத்திலிருந்தெல்லாம் நிறைய பேர் இந்த பூஜைக்கு வேண்டிக் கொண்டு வருவார்கள்.
சாதத்தோடயே கறியையும் வேகவைத்து மசாலா சேர்க்காமல் மிளகாயை கையாலேயே பிச்சுப் போட்டு ஒரு மாதிரி வித்யாசமான சுவையுடன் இருக்கும். கைக்குத்தல் அரிசியைத் தான் பயன்படுத்துவார்கள் என்று நினைவு.
பொதுமக்களுக்கு அன்னதானம் பரிமாறவென தனி இடமெல்லாம் இருக்காது, அப்படியே வாழையிலையை ஏந்தி பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் அடர்ந்த கருவேலங் காட்டில் கிடைத்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். இப்போது அந்த கருவேலம் மரங்கள் இருந்த இடத்தில் வீடுகள் வந்துவிட்டது.
பூஜை தொடர்ந்து தடைபட்டு வருவதால் சாமி நம்ம ஊரைவிட்டு போயிடுச்சுப்பா என்றும், ஏதாவது அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கும் போது, ”பகவதிக்கு பூசை போடததால் தான் இப்படியெல்லாம் நடக்குது” என்றும் பலவாறு பெருசுகள் பேசிக் கொள்வதை ஊரில் அடிக்கடி கேட்க முடியும்.
கோயிலுக்கு அருகில் இருந்த இடத்தை வீடு கட்டவென வாங்கியவர்கள் வீடு கட்டாமல் இருப்பதையறிந்து அவர்களிடம் விசாரித்த போது அந்த மனையில் சாமி ஓட்டம் இருப்பதாகவும், குறுக்கே வீடு கட்டினால் சாமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொன்னதாகவும் சொன்னார்கள். இந்த மாதிரி பல கதைகள் எங்க ஊரில் இன்னும் சில கோயில்களைப் பற்றியும் உலவுகிறது.
நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்து விடுவது தான்.
டிஸ்கி:இந்தத் திருவிழாவை விபரமறிந்து நான் பார்த்ததில்லை என்பதால் என்னால் விரிவான தகவல்களை கோர்வையாக கொடுக்க இயலவில்லை.
அடுத்த பதிவில் பொன்னேர் பூட்டுதலின் இன்றைய பரிதாப நிலைப் பற்றிச் சொல்கிறேன்.
7 comments:
///பெண்கள் நாட் அலவ்டு (சாதாரண நாட்களிலும் பெண்கள் தூரத்தில் இருந்தே வழிபடுவார்கள்)///
லேடி சாமிய பாக்க லேடிஸ்க்கே நாட் அலவ்டா?
///நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்துவிடுகிறார்கள்///
:)))
அருமை அண்ணா.. :))) ரொம்ப சின்ன விசேஷமோ?? அதிகம் சொல்லாத மாதிரி ஒரு ஃபீலிங்க்.. :))
//நாஞ்சில் நாதம் said...
///பெண்கள் நாட் அலவ்டு (சாதாரண நாட்களிலும் பெண்கள் தூரத்தில் இருந்தே வழிபடுவார்கள்)///
லேடி சாமிய பாக்க லேடிஸ்க்கே நாட் அலவ்டா?//
அதானே? :))
//நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்துவிடுகிறார்கள்.//
இது என்னவோ உண்மைதான்...
சுவாரஸ்யமான பதிவு...
//புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்துவிடுகிறார்கள்.//
நச்...
பூஜை போடுறதுக்கான ரூல்ஸ் எல்லாம், கம்பெனி ஹெ.ஆர் பாலிஸி மாதிரி நடைமுறைக்கொவ்வாத மாதிரி இருக்கு...
/
நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்து விடுவது தான்.
/
நல்லதுதானே!
:)))))))))
நன்றி நாஞ்சில் நாதம்,
நன்றி ஸ்ரீமதி,
நன்றி பாலாஜி,
நன்றி தமிழ்ப்பறவை,
நன்றி மங்களூர் சிவா.
ஓ... இந்தமாதிரியெல்லாம் கூட இருக்கா!
//இப்படி பட்ட ரூல்ஸ் அந்த காலத்தில் மக்கள் தொகை கம்மியாக இருந்ததால் ஒர்க் அவுட் ஆகியிருக்கும், இப்போதும் ஃபாலோ பண்ணுவதால் பூஜை சாத்தியமில்லாமலேயே இருக்கு. //
கொஞ்சம் கஷ்டம்தான்!
Post a Comment